எம்.பியாக பதவி ஏற்றார் தலித் எழில்மலை
டெல்லி:
நாடாளுமன்றத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலித் எழில்மலைஉள்ளிட்ட 3 எம்.பிக்கள் திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதில் திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற தலித் எழில்மலை குறிப்பிடத்தக்கவர். திருச்சியில்எம்.பியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம்இறந்துபோனதால் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காலியானது.
இங்கு பா.ஜ.கவின் சார்பில் பிரபல திரைப்பட நடிகரான நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் போட்டியிட்டார்.இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தலித் எழில்மலை போட்டியிட்டார்.
இவர் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தபோது, மத்திய அமைச்சராகவும் இருந்து வந்தார். பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அங்கிருந்து விலகி அ.தி.மு.கவில்இணைந்தார்.
ரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சி மக்களுக்கு பல நன்மைகள் செய்திருந்ததால், திருச்சி தொகுதியில் பா.ஜ.க.வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தலித் எழில்மலை அங்கு வெற்றி பெற்றார்.
அவர் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
இவருடன் ஷாஜன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமதா கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி சிங் வர்மா மற்றும்மன்டிப்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரபோத் பான்டாஆகியோரும் பதவி ஏற்றனர்.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications