வரதட்சனைக் கொடுமை - மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருமகளை வரதட்சனை கேட்டுக் கொடுமை செய்து, அவரது தற்கொலைக்குக் காரணமான மாமியாருக்குதிங்கள்கிழமை 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தசரத ரெட்டியின் மகள் வனஜா.

இவருக்கும் நந்தகோபால் - ரமாபாய் தம்பதியினரின் மகன் சந்திரகாந்துக்கும் கடந்த 1991-ம் ஆண்டு திருமணம்நடந்தது.

திருமணத்திற்குப் பின் வரதட்சனை கேட்டு வனஜா கொடுமைப் படுத்தப் பட்டார். குறிப்பாக ரமாபாய் செய்தகொடுமைகளைத் தாங்க முடியாமல் தன் தாய் வீட்டிற்குத் திரும்பினார் வனஜா.

பிறகு, அங்கு மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமாபாய், நந்தகோபால் மற்றும் வனஜாவின் கணவர் சந்திரகாந்த்ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாகக் கூறப்பட்ட தீர்ப்பில், மாமியார் ரமாபாய்க்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+