விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: 11 விமானங்கள் அழிப்பு
கொழும்பு:
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள விமானப் படைத் தளத்தின் மீதும், பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்தின் மீதும் விடுதலைப் புலிகள் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தினர்.
விமானப் படைக்குச் சொந்தமான 8 போர் விமானங்களையும், இலங்கை ஏர்லைன்சுக்கு சொந்தமான 3 போயிங் பயணிகள்விமானங்களையும் புலிகள் தகர்த்தனர்.
செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்தத் தாக்குதலை நடத்தினர் புலிகள்.
அதிகாலையில் விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த புலிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் விமானங்கள் மீதுதாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அங்கிருந்த ராணுவத்தினரும் காவலர்களும் விடுதலைப் புலிகள் மீது திருப்பிச் சுட்டனர். ஆனால், புலிகளின் மிகஆவேசமான தாக்குதலுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் அதிகமாக புலிகள்துப்பாக்கிகளால் சுட்ட வண்ணம் இருந்தனர்.
புலிகள் நடத்திய அதிபயங்கர துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட கிபிர் ரகத்தைச் சேர்ந்த 2 குண்டு வீச்சுவிமானங்கள் பலத்த சேதமைடைந்தன. எம்.ஐ. 17 ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களையும், மிக்-27 ரகத்தைச் சேர்ந்த 2 ஜெட்விமானங்களையும் புலிகள் தகர்த்தெறிந்தனர். இவை தவிர கே-8 ரகத்தைச் சேர்ந்த ராணுவ விமானங்களையும் புலிகள்சேதப்படுத்தினர்.
மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்த விமானங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன.
பயணிகள் விமானம்:
இதையடுத்து அருகாமையில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்துக்குள் புகுந்த புலிகள் அங்கும் அதிபயங்கரத்தாகுக்தல் நடத்தினர். இதில் அங்கிருந்த 3 போயிங் விமானங்கள் தகர்க்கப்பட்டன. இதில் இரு விமானங்கள் ஏ-340 ரகத்தையும்ஒன்று ஏ-330 ரகத்தையும் சேர்ந்த விமானங்களாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications