டெல்லியில் ராமதாஸ் டேரா: மத்திய அரசு கூட்டணியில் நுழைய முயற்சி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்க்க பாரதீய ஜனதா விருப்பம் காட்டவில்லை.ஆனாலும் எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட வேண்டும்என்பதற்காக டெல்லியில் டேரா போட்டியிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின்நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இது குறித்து பா.ம.க. செயற்குழுவிலும் கூடி விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்திலும்பா.ம.க.மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணைவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பா.ம.கவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்துபேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமைகாலை டெல்லி விரைந்தார்.
பா.ஜ.கவில் ஆர்வமில்லை:
ஆனால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க பாரதிய ஜனதா ஆர்வம் காட்டவில்லைஎனத் தெரிகிறது. பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை சென்னைவந்திருந்தார்.
அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், பா.ம.க. மீண்டும் தேசியகூட்டணியில் இணைய வேண்டுமானால் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டசிடமும், பிரதமர் வாஜ்பாயுடனும் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
அதன் பின்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதித்துமுடிவு எடுக்கப்படும். இது தான் மரபு.
ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று கூறிக் கொண்டுஇங்கேயே இருப்பது பயன்தராது.
மேலும் நினைத்தபோது கூட்டணியில் இருந்து விலகுவது, நினைத்துபோது மீண்டும்இணைவது என்பது போன்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications