பாதி விமானங்களை இழந்தது இலங்கை: ரூ. 3000 கோடி நஷ்டம்
கொழும்பு:
இலங்கை ஏர்லைன்சுக்கு சொந்தமான பாதி விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் நடத்தியதாக்குதலில் சேதப்படுத்தப்பட்டுவிட்டன.
ஏர்லங்கா என்ற பெயரில் விமானங்களை இயக்கி வரும் இலங்கை ஏர்லைன்சிடம் மொத்தம் 12 விமானங்கள்இருந்தன.
இதில் 6 விமானங்கள் செவ்வாய்க்கிழமை வெறு நாடுகளுக்கு சென்றிருந்தன. மீதமிருந்த 6 விமானங்களும்விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் தான் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 விமானங்கள் முழுமையாகத் தகர்ந்துவிட்டன. இவற்றைஇனி இயக்கவே முடியாது. மீதமுள்ள 3 விமானங்கள் பலத்த சேதமடைந்துவிட்டன. இவற்றை இயக்க முடியுமாஎன்பது குறித்து விமானவியல் வல்லுனர்கள் சோதித்த பின்னர் தான் தெரியவரும்.
இதனால், புதன்கிழமை விமான நிலையத்தை இலங்கை அரசு திறந்தாலும் கூட அங்கிருந்து கிளம்பும் அளவுக்குஎந்த விமானமும் பறக்கும் நிலையில் இல்லை. தாக்குதலின்போது வானில் பறந்து கொண்டிருந்ததால் தப்பிய 6விமானங்களும் இப்போது இந்தியா உள்பட வெளிநாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த 6 விமானங்களும் திரும்ப வந்திறங்கிய பின்னர் தான் வெளிநாடுகளுக்கு இலங்கை ஏர்லைன்சால் எந்தவிமானத்தையும் இயக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மட்டும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்குள் வந்திறங்கியிருக்க வேண்டிய 40 விமானசர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
இலங்கை ஏர்லைன்சில் எமிரேட்ஸ் ஏர்லைன்சுக்கு 40 சதவீத பங்குகள் உள்ளன. இதனால், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்உடனடியாக சில விமானங்களைக் கொடுத்து இலங்கைக்கு உதவும் எனத் தெரிகிறது.
விமானப் படைக்கு நஷ்டம்:
விமானப் படையின் 8 போர் விமானங்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த சேதம் ரூ. 300 கோடியாகும்.
இதனால், செவ்வாய்க்கிழமை புலிகள் நடத்திய தாக்குதலால் விமானங்களை இழந்த வகையில் மட்டும் அரசுக்கு ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தவிர விமான நியைத்துக்குள் ஏற்பட்டுள்ள சேதம், ரத்து செய்யப்பட்டவிமான சர்வீஸ்களால் ஏற்பட்ட நஷ்டம், பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்தது ஆகிய வகையில் மேலும்சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications