• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓமன், ஏமனிலும் அப்போலோவின் சேவை

By Staff
|

சென்னை:

வளைகுடா நாடுகளான ஓமன் மற்றும் ஏமன் நாடுகளிலும் தன்னுடைய சேவைக் கரத்தை நீட்டியுள்ளதுஅப்போலோ மருத்துவமனை.

ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ சேவை நிறுவனமாகச் செயல்பட்டு வரும் அப்போலோ குரூப், இந்த 2நாடுகளுக்கும் 6000 பெட்டுகளைத் தருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும், அந்த 2 நாடுகளிலும் தன்னுடைய தகவல் தொடர்பு மையங்களை வைப்பதற்காகவும் அப்போலோஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தத் தகவல் தொடர்பு மையத்தில் உள்ள "டெலிமெடிசின்" வசதி மூலம், சிகிச்சை பெற விரும்புபவர்கள்அப்போலோ குரூப்பின் அனைத்து மருத்துவமனைகளின் மூலமும் நேரடியாக மருத்துவ ஆலோசனை பெறமுடியும்.

அந்த ஆலோசனைகளின் உதவியுடன் தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளமுடியும்.

யு.என்.ஐ.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X