புதிய அமெரிக்க தூதர் இன்று பதவியேற்பு
டெல்லி:
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று டெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பதவி ஏற்றுக் கொள்கிறார்.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரையும் மாற்றியுள்ளார் புஷ். ராபர்ட் பிளாக்வில் என்பவரைக் கடந்த மார்ச் 22ம்தேதி அமெரிக்கத் தூதராக நியமித்தார். கடந்த வாரம் அமெரிக்காவில் இதற்கான முறைப்படியான உத்தரவையும்பிளாக்வில் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, கிளிண்டன் காலத்தில் அமெரிக்கத் தூதராக இருந்த ரிச்சர்ட் செலஸ்டி, வெள்ளிக்கிழமைஇந்தியாவுக்கு ஒரு "குட்-பை" சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். அவரிடமிருந்து தூதரகப் பொறுப்புகள்அனைத்தையும் பெற்றுக் கொள்கிறார் பிளாக்வில்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில்பேராசிரியராக இருந்த பிளாக்வில்லை அழைத்து, இந்த அமெரிக்கத் தூதர் பதவியைக் கொடுத்துள்ளார்அமெரிக்க ஜனாதிபதி புஷ்.
அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ஏராளமான புத்தகங்களையும் பிளாக்வில் எழுதியுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கவுன்சிலில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இயக்குநராகவும், ஐரோப்பாவில் நடைபெற்ற வார்சாஒப்பந்தத்தின்போது அமெரிக்காவின் முக்கிய அங்கத்தினராகவும் பல பொறுப்புகளை இதற்கு முன்னர் ஏற்றுள்ளார்ராபர்ட் பிளாக்வில்.
இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பிளாக்வில் மேலும் வளர்ப்பார் என்ற பலத்தநம்பிக்கையுடன் அவரை அனுப்பியுள்ளார் ஜார்ஜ் புஷ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications