ஜனாதிபதி நாராயணன் குணமடைகிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தற்போதுகுணமடைந்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை ஒரு வைரஸ் கிருமி காரணமாக நாராயணனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து,அவர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன் காரணமாக, அவர் பங்கு கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

கார்கில் வெற்றி நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், வியாழக்கிழமை டெல்லி-இந்தியா கேட்டில் உள்ளபோர் வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவிருந்தார் நாராயணன்.

அவர் உடல்நலம் குறைந்ததையடுத்து இந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஜனாதிபதிக்குப் பதிலாகஅவருடைய மனைவி உஷா நாராயணன், இந்தியா கேட்டில் கார்கில் தீபத்தை ஏற்றி வைத்து, கார்கில் வீரர்களுக்குஅஞ்சலி செலுத்தினார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாராயணனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து,தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருகிறது என்று டாக்டர்கள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+