நடிகர் சிவாஜி வீட்டில் கார்கில் தீபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் சோகத்திலும் தங்களுடைய நாட்டுப்பற்றைக் காண்பித்தனர்.அவருடைய வீட்டில் கார்கில் தீபம் ஏற்றப்பட்டது.
நடிகர் சிவாஜியின் வீட்டிலும் வியாழக்கிழமை இரவு கார்கில் தீபம் ஏற்றப்பட்டது. சிவாஜியின் மகன் நடிகர் பிரபுகார்கில் தீபத்தை ஏற்றி வைத்தார்.
பின்னர், சிவாஜியின் குடும்பத்தினர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜி இறந்த துக்கத்திலும், அக்குடும்பத்தினர் கொண்டிருந்த நாட்டுப்பற்றைப் பார்த்தவர்கள் நெகிழ்ந்துபோனார்கள்.












Click it and Unblock the Notifications