சிவாஜி மறைவு: நாளை இரங்கல் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத்தில்ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
நடிப்புலகின் மாமேதை நடிகர் திலகத்தின் மறைவு கலை உலகுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அனைத்துத்தரப்பினரின் ஒத்துழைப்போடு நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நடிகர்சங்கம் கண்ணீருடன் நடத்தியது.
இதேபோல ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடிகர் சங்கத்தில் அமைந்துள்ள சுவாமி சங்கரதாஸ்கலையரங்கத்தில் மிகப்பெரிய இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலை உலகத்தினர் அனைவரும் கலந்துகொண்டு நடிகர் திலகத்திற்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதேபோல, திரை உலகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கின்றனர்என்று விஜயகாந்த்அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications