பா.ம.க. விவகாரத்தில் பின்வாங்குகிறது திமுக
இரவு பகலாக பயிற்சி:
இதையடுத்து இவர்களுக்கு கடும் பயிற்சி தொடங்கியது. இரவு பகலாக இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.கடுநாயகே விமானத் தளத்தைப் போன்ற செற்கை காம்ப்ளக்ஸ் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட விமான தள செட் ஒன்றும்போடப்பட்டது.
பல முன்னாள் விமானப் படை அதிகாரிகள், வீரர்களிடமும் விமானப் படைத் தளம் குறித்த தகவல்களை சேகரித்தனர். இது தவிரசுற்றுலாப் பயணிகள் போலவும், அந்தப் பகுதியை சுற்றிப் பார்ப்பது போலவும் இரவும் பகலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுவிமானப் படைத் தளத்தின் செயல்பாட்டைக் கண்காணித்து வந்தனர்.
விலைபோன ஏர்-மென்கள்:
பணத்தையும் தண்ணீராய் செலவு செய்தனர். விமானப் படையில் உள்ள அதிகாரிகளையும் பணத்தால் அடித்தனர். மிகுந்தசிரமத்துக்குப் பின் கடுநாயகே விமானப் படைத் தளத்தின் வரைபடத்தையும், அருகில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்தின் வரைபடத்தையும் ஒரு வழியாய் கைப்பற்றியது புலிகளின் உளவுப் பிரிவு. பின்னர் விமானத் தளத்தில் உள்ள சிலஏர்-மென்களை விலைக்கு வாங்கினர் புலிகள்.
இப்போது 2 ஏர்-மென்கள் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இவர்கள் தமிழர்கள அல்ல, சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2ம் தேதி பிரபாரகனிடமிருந்து தாக்குதலுக்கான உத்தரவு வந்தது. திட்டத்தை செயல்படுத்த 2 வார அவகாசம் கேட்டதுபுலிகளின் உளவுப் பிரிவு.
பிரபாகரனுடன் உணவுண்ட தற்கொலைப் படையினர்:
பின்னர் இந்தத் தாக்குதலுக்காகத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டு தற்கொலைக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டகரும்புலிகளை பிரபாகரனே நேரில் சந்தித்தார். அவர்களுடன் இரவு உணவையும் சேர்ந்து உண்டார். விமானப் படையின்குண்டுவீச்சால் தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் சேதத்ததை உடனடியாக நிறுத்தியாக வேண்டியதன் அவசியத்தை அவர்களிடம்உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார் பிரபாகரன்.
முதலில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பயணிகள் கூட்டம் மிக்க விமான நிலையத்தைத் தாக்கக் கூடாது, முதலில் விமானப்படைத் தளத்தைத் தான் தாக்க வேண்டும். பயணிகள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு ஓடிவிடும் அளவுக்கு அவகாசம்தந்த பின்னர் தான் விமான நிலையத்தைத் தாக்க வேண்டும் என அவர்களிடம் பிரபாகரன் கூறினார். பொதுமக்கள், பயணிகளின்உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து இந்தத் தாக்குதல் படையின் முதல் பிரிவு கடல் மார்க்கமாக நாட்டின் மேற்குக் கரைக்கு அனுப்பப்பட்டது.இன்னொரு பிரிவு சாலை வழியே கொழும்பு வந்தனர். தாக்குதலுக்குத் தேவையான வெடிமருந்துகள், துப்பாக்கிகள் ஆகியவைபடகுகள் மூலம் அனுப்பப்பட்டன. மேற்குக் கரையில் ஒரு வீட்டில் பதுக்கப்பட்டன.
பஸ்ஸில் பயணம்:
தாக்குதல் நடந்த தினமான 24ம் தேதி கரும்புலிகள் அனைவரும் கொழும்புவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கம்பஹாமாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒன்று சேர்ந்தனர். ஆயுதங்களும் வெடி குண்டுகளும் வந்து சேர்ந்தன.
பின்னர் அனைவரும் 36 பேர் அமரக் கூடிய சொகுசு பஸ்ஸில் நள்ளிரவில் விமானத் தளத்துக்குக் கிளம்பினர். கருப்பு ஜன்னல்கண்ணாடிகளுடன், ஸ்கிரீன்களும் போடப்பட்டு உள்ளே இருப்பவர்களை முழுவதும் மறைக்கும் இந்த பேருந்தின் பெயர் ரோஜா.
இந்தப் பேருந்தின் முன் விமானப் படைத் தளத்தில் உள்ள நிலைமையை அறிந்து தகவல் சொல்ல சில புலிகள் தனியாக வெவ்வெறுவாகனங்களில் பயணம் செய்தனர். அவர்கள் பஸ்சில் பயணம் செய்த புலிகளுக்கு வழியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்,போலீஸ் கண்காணிப்பு மையங்கள் குறித்து தகவல் அனுப்பியவண்ணம் வந்தனர்.
கொழும்பிலிருந்து மத்தாரைக்கு செல்லும் போர்ட் போட்டுக் கொண்டு இந்த பஸ் சென்றது. குரானா என்ற இடத்தில் ரயில்தண்டவாளத்துக்கு அருகே கரும்புலிகள் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு அந்த பஸ் சென்றது.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி சுமந்த வண்ணம் இந்தப் புலிகள் விமானப் படைத் தளத்தைநோக்கி நடந்து சென்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications