தாக்குதலுக்கு கரும்புலிகள் தயாரானது எப்படி?
கொழும்பு:
கடந்த வாரம் கொழும்பு விமானப் படைத் தளத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன்தான் ப்ராஜக்ட் கடுநாயகே என்ற பெயரில் திட்டம் வகுத்துக் கொடுத்தார் என்று தெரியவந்துள்ளது.
தனது உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மன் மற்றும் 2 மூத்த புலிகளுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைபிரபாகரன் வகுத்தார். பிற தாக்குதல்களைப் போல் அல்லாது இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு கட்டத்தையும் வகுத்துக்கொடுத்துள்ளார் பிரபாகரன்.
சிறுத்தைகளை களமிறக்கிய பிரபாகரன்:
மிக பயங்கர பயிற்சிகள் பெற்ற தனது கமாண்டோ படையான சிறுத்தைகளை களத்தில் இறக்க பிரபாரகன் உத்தரவிட்டது தான்இந்தத் தாக்குதலுக்கான பிள்ளையார் சுழி எனக் கருதப்படுகிறது. மேலும் விமான எதிர்ப்புத் தாக்குதல்களில் தேர்ச்சி பெற்றபுலிகளையும், ரகசியப் படையைச் சேர்ந்த புலிப் படையினரையும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
யாழ்பாணம் மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட-கிழக்குப் பகுதிகளில் இலங்கை விமானப் படை விமானங்களின் தாக்குதல்தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததையடுத்து அரசுக்குப் பாடம் புகட்ட கடந்த ஆண்டே இந்தத் தாக்குதல் திட்டத்தைபிரபாகரன் வகுத்துவிட்டார்.
ஆனால், நார்வே தூதரின் அமைதி முயற்சிகள் அப்போது தான் சூடுபிடித்திருந்தன. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் தெற்குப்பகுதியில் எந்தத் தாக்குதலும் நடத்தக் கூடாது என்று நார்வே தூதர் பிரபாகரிடனிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இதனால்தனது தாக்குதல் திட்டத்தை ஒத்தி வைத்தார்.
ஆனால், கடந்த ஜூன் 30ம் தேதி புலிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் விமானப் படை விமானங்கள் தமிழர்களின் வீடுகள்மீதும் அவர்களின் குடியிருப்புகள் மீதும் கடும் தாக்குதல் நடத்தின. மிக பயங்கரமான அந்தத் தாக்குதலில் புலிகளுக்கு ஏற்பட்டசேதத்தைவிட அப்பாவித் தமிழர்களுக்குத் தான் மிக அதிகமான சேதம் ஏற்பட்டது.
உத்தரவிட்ட பிரபாகரன்:
இதையடுத்து தனது தாக்குதல் திட்டத்துக்கு பிரபாகரன் மீண்டும் உயிர் கொடுத்தார். அதற்கு முன்னதாக ஒரு எச்சரிக்கையும்கொடுத்தார். கடந்த 2ம் தேதி புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கையில், விமானப் படைத் தாக்குதலைஉடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை அரசும் ராணுவமும் சந்திக்க வேண்டியிருக்கும் எனக்கூறப்பட்டிருந்தது.
அன்றைய தினமே கொழும்பு விமானப் படைத் தளத்தைத் தாக்கும் தனது திட்டத்தை அமல்படுத்தவும் உளவுப் பிரிவுக்குஉத்தரவிட்டார். இந்தத் திட்டத்துக்கு புலிகள் வைத்த பெயர் ப்ராஜக்ட் கடுநாயகே.
இதையடுத்து சிறுத்தைகள், விமான எதிர்ப்புப் படையினர், உளவுப் படையினர் அடங்கிய 12 பேர் கொண்ட தாக்குதல் குழுதேர்ந்தெடுக்கப்பட்டது. இவர்கள் தற்கொலைப் படையான கரும்புலிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications