மீண்டும் காங்கிரசில் சேருகிறார் வாழப்பாடி ராமமூர்த்தி
டெல்லி:
தனிக் கட்சி நடத்தி வரும் வாழப்பாடி ராமமூர்த்தி அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமாகிறார்.
இதையடுத்து, விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது ராஜிவ் காங்கிரஸ் கட்சியை காங்கிரசில் இணைக்கவுள்ளார் வாழப்பாடிராமமூர்த்தி.
அணி மாறுவதில் ராமதாசுக்கு இணையான தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும்இடையே பிரச்சனை உருவானது. ஆனாலும் 1998ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி எனஅப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தெரிவித்ததையடுத்து காங்கிரஸைவிட்டு விலகினார்.
என்.டி. திவாரியும், அர்ஜூன் சிங்கும் நடத்திக் கொண்டிருந்த திவாரி காங்கிரசில் சேர்ந்தார். தமிழகத்தில் போட்டியிட்டு பெரும்தோல்வி கண்டார். பின்னர், அதிலிருந்து விலகி தமிழக ராஜிவ் காங்கிரசைத் துவக்கினார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து சேலம் எம்.பி. தொகுதியில் வென்றார். இவருக்கு வாஜ்பாயின் மத்தியஅமைச்சரைவயில் பெட்ரோலியத் துறை அமைச்சர் பொறுப்பும் வாங்கித் தந்தார் ஜெயலலிதா.
வாஜ்பாயின் ஆட்சியை ஜெயலலிதா கவித்தார். இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அதிமுகவுக்குப் பதில் திமுக இடம் பிடித்தது.வாழப்பாடியும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்தார்.
1999ம் ஆண்டு நாடாளுன்றத் தேர்தலில் ராமதாஸ், வாழப்பாடி இருவருக்கும் சேர்த்து கருணாநிதி 7 தொகுதிகள் கொடுத்தார்.அதில் இரண்டை வாழப்பாடி தருவதாக கருணாநிதியிடம் கூறிய ராமதாஸ் ஒன்றை மட்டும் தான் கொடுத்தார்.
இதனால் ராமதாஸ்-வாழப்பாடி சண்டை மூண்டது. வேறு வழியில்லாமல் ராமதாஸ் கொடுத்த ஒரே ஒரு சீட்டை மட்டும் வாங்கிக்கொண்டு சேலத்தில் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் செல்வகணபதியிடம் தோற்றார்.
அதுமுதல் ராமதாசும் வாழப்பாடியும் தெருச்சண்டை போட்டு வந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தான் வாழப்பாடியை தூண்டிவிடுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ராமதாஸ் விலகிப்போய் மீண்டும் இப்போது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்குத் தான் கருணாநிதி அதிக இடம் ஒதுக்குகிறார் எனக் குற்றம் சாட்டிய வாழப்பாடி,திமுக கூட்டணியில் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவைத் தான் ஆதரித்தார். பின்னர் வழக்கம்போல் ஜெயலலிதாவைத்திட்டினார்.
இப்போது திமுக, அதிமுக, ராமதாஸ் என எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு தனித்துக் கட்சி நடத்துவதால் பயனில்லைஎன்பதால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் ஓடியிருக்கிறார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
T Nagar: சீட்டே இல்லை! பதவி எதுக்கு? ராஜினாமா செய்த திநகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications