வாஜ்பாயுடன் பா.ம.க. நேரடியாகப் பேசியது திமுகவுக்கு பிடிக்கவில்லை
திருச்சி:
பிரதமர் வாஜ்பாயுடன் நேரடியாகப் பேசியதை திமுக விரும்பவில்லை, அதனால் தான் பா.ம.க. மீண்டும்கூட்டணியில் இணைவதை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர்காடுவெட்டி குரு கூறினார்.
அப்போது அவர் திமுக உட்பட பா.ம.கவின் இணைப்பை எதிர்க்கும் பல கட்சிகளையும் கடுமையாகத் தாக்கிப்பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,
பிரதமர் வாஜ்பாய் அவர்களே பா.ம.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள சம்மதித்துவிட்டார்.
ஆனால், ஒரு காலத்தில் பா.ம.க.வின் தயவால் அரசியல் செய்துவந்த திமுக இப்போது நம்மை கூட்டணியில்சேரவிடாமல் எதிர்க்கிறது. அதுமட்டுமல்லாமல், மறைமுகமாகப் பல பிரச்சனைகளையும் கிளப்பி வருகிறது.
நாம் வாஜ்பாயுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதை திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.வரும் உள்ளாட்சித் தேர்தலில் யார் பா.ம.க.வின் கொள்கைகளை மதிக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணிவைப்போம்.
இல்லாவிட்டால் பா.ம.க., தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும்.
இவ்வாறு குரு அந்தக் கூட்டத்தில் பேசினார்.
மேற்கண்ட காரணங்களால்தான் ராமதாஸ் டெல்லியிலிருந்து திரும்பி 3 நாட்கள் ஆகியும், இன்னும்கருணாநிதியைச் சந்தித்துப் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications