தமிழக அரசைக் கலைக்க வேண்டாம்: மாறன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க.வலியுறுத்தக் கூடாது என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.

கருணாநிதி கைது விவகாரத்துக்குப் பின் தமிழக்ததில் அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என திமுக கோரிவருகிறது. இது தொடர்பாக பல வகைகளில் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்துப் பார்த்தது.

ஆனால், திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மாறன், பாலுஆகியோர் திரும்ப திரும்பக் கொடுத்த நெருக்குதல்கள் காரணமாக கருணாநிதியைக் கைது செய்த அதிகாரிகளைமட்டும் உடனே மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப பா.ஜ.க. அரசு உத்தரவிட்டது.

இந் நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய முரசொலி மாறன்,

நாம் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அந்த நிலையிலிருந்து நாம் மாறக்கூடாது. (ஆனால், கைதாகி விடுதலையான மறுநாள் பேசிய மாறன், 356வது பிரிவை திமுக எதிர்க்கிறது என்றாலும்கூட இப்போது அந்தப் பிரிவை அதிமுக அரசுக்கு எதிராக பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்று கூறியதுநினைவுகூறத்தக்கது.).

கருணாநிதி, நான், பாலு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் சரியாக போராட்டம் நடத்தவில்லை.திமுகவை அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் மாறன்.

அதிமுக அரசைக் கலைக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்த மாறன், மத்திய அரசு அதை ஏற்காததால்,வெறுத்துப் போய் அதிமுக அரசைக் கலைக்க வேண்டாம் எனறு மாறன் கூறுவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+