டெல்லி ஆணை: போலீஸ் அதிகாரிகளை அனுப்ப ஜெ. மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசு அழைத்துள்ள தமிழக போலீஸ் அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று தமிழக அரசு மத்தியஅரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சக செயலகப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன், உதவிக் கமிஷனர்கள் ஜார்ஜ் மற்றும் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்திய அரசுஅழைத்தது.

தவிர, மேலும் 7 போலீஸ் அதிகாரிகளையும் மத்திய அரசு அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாகவே, கடந்த 10 நாட்களுக்கு முன், முன்னாள் தமிழக டி.ஜி.பியும் தற்போதைய தமிழக போலீஸ்பயிற்சிக் கல்லூரி இயக்குநருமான டாக்டர் ஆர். ராஜகோபாலனையும், தேசிய பாதுகாப்புப் படையான கறுப்புப்பூனைப் படைக்கு தலைமை தாங்கச் சொல்லி அழைத்திருந்தது.

இவ்வாறு, தமிழக அரசின் கட்டுப் பாட்டில் உள்ள போலீஸ் அதிகாரிகளை, தமிழக அரசுடன் கலந்து பேசாமலேயேமத்திய அரசு அழைத்துள்ளது.

இதனால் மத்திய அரசு அழைத்துள்ள போலீஸ் அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என்று மத்திய அரசுக்குக்கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+