மூப்பனார் பயம்: வாழப்பாடி ராமமூர்த்திக்கு காங்கிரஸ் நோ-என்ட்ரி
சென்னை:
மூப்பனாரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்பதால், வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியில்சேர்க்க முடியாது என சோனியா காந்தி கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கு சோனியாவும் முதலில் பச்சைக் கொடி காட்டிவிட்டார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளமூப்பனாருக்கு வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரசில் சேர்க்கும் முடிவால், மூப்பனார் வருத்தப்படுகிறார் என்றதகவல் சோனியாவுக்கு எட்டியது.
இதையடுத்து வாழப்பாடி ராமமூர்த்திக்கு காங்கிரஸ் கட்சி கதவை அடைத்துவிட்டது.
மூப்பனார்-வாழப்பாடி மோதல் பின்னணி:
1989ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் மூப்பனார்.அப்போது அதிமுக இரண்டாகப் பிரிந்து ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் போட்டியிட்டது. திமுக தனித்துநின்றது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார், யாருடனும் கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிட்டாலேபெரும் வெற்றி பெற்றுவிடலாம் என அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தியிடம் கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து மூப்பனாரை நீக்கிவிட்டு வாழப்பாடி ராமமூர்த்தியை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினார்ராஜிவ்காந்தி.
அன்று முதல் மூப்பனாருக்கும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் எப்போதுமே ஒத்துப் போனதில்லை. வாழப்பாடிதலைவராக இருந்தபோது கட்சியில் மூப்பனார் ஓரம் கட்டப்பாட்டார்.
இதனால், வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்த்து தமிழகத்தில் தனது கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கும் மூப்பனாரின் மனதை நோகடிக்க சோனியா காந்தி விரும்பவில்லை. மேலும் எப்படியாவதுமூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசை காங்கிரஸ் கட்சியில் இணைத்துவிட சோனியா முயன்று வருகிறார்.
வாழப்பாடி ராமமூர்த்தி பேட்டி:
இந்தத் திட்டங்களுக்கு வாழப்பாடியின் வருகை வேட்டு வைத்துவிடும் என்பதால், அவரை கடைசி நேரத்தில்வெட்டி விட்டுவிட்டது காங்கிரஸ்.
இது குறித்து வாழப்பாடி ராமமூர்த்தி சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் கூறுகையில்,
நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், மூப்பனார்வருத்தப்படுவார் என்பதால் என்னை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை.
அதே போல காங்கிரஸ் கட்சியில் சேர நானும் விரும்பவில்லை. இப்போது திமுக, அதிமுக என்ற இரு திராவிடக்கட்சிகள் மீது தான் காங்கிரஸ் சவாரி செய்து கொண்டுள்ளது.
காங்கிரஸ் எப்போது தனியாக நின்று பிறர்க்கு தலைமை தாங்குமோ அப்போது தான் அந்தக் கட்சியில் சேருவேன்.
ராமதாசுக்கு டோஸ்:
பா.ம.க. தலைவர் ராமதாஸ், எப்படியாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என நம்பிக்கொண்டிருக்கிறார். அவரை அங்கே சேர்ப்பதே சந்தேகம் தான். அப்படியே சேர்த்தாலும் அமைச்சர் பதவி தர மாட்டார்கள்.
அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால், மீண்டும் அதிமுகவுக்கே ஓடி வந்துவிடுவார்.
இவ்வாறு வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications