ராமன் கமிஷன் விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை
சென்னை:
கருணாநிதி கைது விவகாரத்தில் உண்மையில் நடந்ததைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ராமன் கமிஷன்விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பொது நல மனுவை தாக்கல் செய்திருப்பவர் விஜயகுமார் என்ற வழக்கறிஞர் ஆவார். மனுவில்கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த ஜூன் 30-ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர்கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாரைக் கடமை ஆற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,போலீசார் மீது ஒருதலை பட்சமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும்.
இதில் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த கோர்ட் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கைது சம்பவம்பற்றிய கேசட்களும், ஜார்ஜ்பெர்ணான்டஸ் கமிட்டி அளித்த தகவல்களும் முழுமையானது அல்ல.
மத்திய அரசு இதை ஒருதலைபட்சமாகக் கையாளுகிறது. அதனால்தான், ஜூலை 4-ந்தேதி மாநில அரசுக்குஎச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பியது.
இவ்வாறு மத்திய அரசு, மாநில அரசுகளை மிரட்டவோ, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவோ சட்டத்தில்எந்தவித முகாந்திரமும் இல்லை. மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு அணுகுமுறைகளைக்கடைபிடித்து வருகிறது.
எனவே கோர்ட் இது பற்றி விசாரித்து மத்திய அரசின் அனாவசிய தலையீட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு விஜயகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுதாரர் கூறியிருக்கும் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது இவர் ஒரு அதிமுக அனுதாபி என்பதுபுலனாகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications