கரும்புலிகளின் உடல்களை ஒப்படைக்க இலங்கை தயார்
கொழும்பு:
கொழும்பு விமானப் படைத் தள தாக்குதலில் இறந்தபுலிகளின் உடலை ஒப்படைக்க செஞ்சிலுவை சங்கம்விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டு பேசிவருகிறது.
அப்போது மொத்தம் 14 புலிகள் இறந்தனர். இவர்களில் சிலர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். சிலர் தாங்களாகவே வெடிகுண்டுகளை இயக்கி உடல்களைத் தகர்த்துக் கொண்டனர்.
அவ்வாறு இறந்த 14 புலிகளின் உடலை புலிகளிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது.
இதற்காக செஞ்சிலுவை சங்கத்தினரை இலங்கை அரசின் காவல்துறையினர் அணுகியுள்ளனர். இது குறித்துஅச்சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் குனவர்தனே கூறியதாவது,
தாக்குதலில் இறந்த புலிகளின் உடலை புலிகளிடம் ஒப்படைக்க இலங்கை அரசு எங்களைத் தொடர்பு கொண்டது.நாங்கள் இதுகுறித்து புலிகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.
இதற்கு புலிகள் தரப்பும், இலங்கை அரசும் சம்மதித்து விட்டால், கொழும்பு பகுதியில் நடந்த தாக்குதலில் இறந்தபுலிகளின் உடலை ராணுவம் ஒப்படைப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.
இதற்கு முன்பு, வடக்குப் பகுதியில்தான் இதுமாதிரி இறந்த உடல்களை 2 தரப்பினருக்கும் ஒப்படைத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புலிகள் மீதான தடை தொடரும்:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்த வசதியாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமான நிலையம் மீதான தாக்குதலையடுத்து தடையை நீக்க வாய்ப்பேயில்லை என இலங்கைஅறிவித்துள்ளது.
இலங்கை தவிர இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications