வன்னியர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்: ராமதாஸ்
விழுப்புரம்:
பா.ம.க. சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கவில்லை, அப்படிப் பார்த்தால் 1967-ம் ஆண்டிலிருந்து அமைக்கப்பட்டஎந்தக் கூட்டணியும் நிலையானது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.
கூட்டத்திற்கு வன்னியர் சங்கத் தலைவர் குரு தலைமை வகித்தார். பா.ம.க. மாநிலத் தலைவர் மணி, முன்னாள்அமைச்சர் சண்முகம் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ராமதாஸ் பேசியதாவது,
பா.ம.க. சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக சிலர் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் 1967-ம்ஆண்டிலிருந்து அமைக்கப்பட்ட எந்தக் கூட்டணியும் நிலையானது அல்ல. முதல்வர் ஜெயலலிதாவுக்குவன்னியர்கள் மீது அளவற்ற வெறுப்பும் கோபமும் உள்ளது.
வன்னிய அதிகாரிகளுக்கு தகுதியிருந்தும் உயர் பதவிகள் அளிக்கப்படுவதில்லை. மேலும், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல சமுதாயங்களைச் சேர்க்க சில அரசியல்வாதிகள் முயலுகிறார்கள்.
இதன் மூலம் வன்னியர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்திற்கு கிடைக்கும் வேலை வாய்ப்பைக்குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த சூழ்ச்சியை முறியடிக்க வன்னியர் சங்கம் கடுமையாகப் போராடும். அதற்காக நான் என் உயிரை விடவும்தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
வன்னியர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு மறைந்த வன்னிய அடிகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்களை அரசு இன்னும் 2 மாதத்திற்குள்நிரப்பவேண்டும்.
சமூக நீதிகேட்டுப் போராடிய வன்னியர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை அரசு வாபஸ்பெறவேண்டும். ராமசாமி படையாச்சியாருக்கு கடலூரில் வெங்கல சிலை அமைக்கப்படும்.
இதுபோன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications