போலி கன்சல்டன்சி: மாணவர்களை ஏமாற்றிய பெண் கைது
சென்னை:
சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 204 மாணவர்களை ஏமாற்றிய ஐ.டி. கன்சல்டன்ட்நிறுவனத்தின் பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சாப்ட்வேர் வேலை முதல் நர்ஸ் வேலை வரை வாங்கித் தருவதாகஒவ்வொருவரிடமும் ரூ. 1 லட்சம் வரை இந்த நிறுவனம் வசூலித்தது. இப்படி 204 பேரிடம் இந்த நிறுவனம் பணம்வசூல் செய்தது.
ஆனால், தீடீரென் நிறுவனத்தை மூடிவிட்டு மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டமாணவ, மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் குமார் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பறிமுத்ல செய்யப்பட்டது.
ஆனால், பூஜா வேணுகோபாலும், வேணுகோபாலும் தப்பிவிட்டனர். இவர்கள் பெங்களூரில் மறைந்திருப்பதாகதகவல் வந்ததையடுத்து சிறப்புப் படை பெங்களூர் விரைந்தது. குயீன்ஸ் ரோட்டில் ஒரு அப்பார்ட்மென்டில்பதுங்கியிருந்த பூஜாவை போலீசார் சனிக்கிழமை இரவில் கைது செய்தனர். ஆனால், வேணுகோபால்பெங்களூரிலிருந்து தப்பி பூனாவுக்கு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவரிடமிருந்து ரூ. 1.25 லட்சம் பணம், 20 பவுன் நகை, 1.25லட்சம் மதிப்புள்ள லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வேணுகோபாலைத் தேடி தனிப்படை பூனா விரைந்துள்ளது. இந்த வேணுகோபால் ஆந்திராவில் இதுபோன்று பலமோசடி நிறுவனங்களை நடத்தி வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
போலி மார்க் சர்டிபிகேட் முதல், வேலை பார்த்ததற்கான போலி எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் வரை வாங்கிக்கொடுப்பதில் வல்லவர். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications