"சி.பி.ஐ. அதிகாரி" வேஷம் போட்டு பணம் பறித்த 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சி.பி.ஐ.அதிகாரிகள் போல் வேடமிட்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை ஏமாற்றிய மும்பையை சேர்ந்த 2இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது:

திங்கள்கிழமை மும்பையைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளியான மதன்ஜனா (வயது 25) என்பவரும், மனோஜ் (வயது23) என்பவரும் சி.பி.ஐ.அதிகாரிகள் போல் வேடமிட்டு ரயிலில் பயணம் செய்வார்கள். இவர்கள் முதலில்பயணிகளிடம் நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள்..

மதன் சி.பி.ஐ. அதிகாரி போல் பயணிகளிடம் பேசி, ரயில் கொள்ளைகள் அதிகமான அளவில் நடப்பதால்அதிகமான அளவு பணத்தை ரயிலில் கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று கூறுவார். பின், பணத்தைதான் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி பயணிகளை ஏமாற்றி பணத்தை வாங்கி கொள்ளும்திட்டத்தை செயல்படுத்தி வந்தார்.

பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதையும் கொடுத்து, அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவர்களிடம்பணத்தை திருப்பி தருவதாக பயணிகளுக்கு உத்தரவாதமும் அளித்து ஏமாற்றி வந்தார்.

இவர்கள் முதலில் பெங்களூர் செல்ல இருந்த பயணியான நாகராஜ் என்பவரை ஏமாற்றி ரூ.7,000த்தை பெற்றுக்கொண்டனர். ஏமாந்த நாகராஜ், பின்னர் ரயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தார்.

மும்பை செல்லும் ரயிலுக்காக காத்திருந்த சதாசிவம் என்பவரிடம் இவர்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்தமுயன்றனர். ஆனால் சதாசிவம் அவர்களை நம்ப மறுத்து பணத்தை தர மறுத்துவிட்டார். இதனால் அவர்கள்சதாசிவத்தின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடினர்.

சதாசிவம் உதவி கேட்டு குரல் எழுப்பியதும், ரயில்வே போலீசும், பொதுமக்களும் இவர்களைத் துரத்திப் பிடித்தனர்.அவர்களிடமிருந்து சதாசிவத்தின் பெட்டியும், நாகராஜிடமிருந்து அவர்கள் ஏமாற்றி பெற்ற பணமும் பறிமுதல்செய்யப்பட்டன.

மதனை போலீசார் விசாரித்த போது மதன் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக மருத்துவர்கள் கொடுத்த சாட்சி பத்திரத்தைகாட்டினார். மேலும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கான பணத்திற்காகத்தான் பயணிகளை ஏமாற்றி பணம்பறிப்பதாக கூறினார்.

இவர்கள் இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே போலீஸ் அதிகாரிகள்கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+