இலங்கை: எல்.டி.டி.ஈ. தாக்குதலை விசாரிக்க இன்னொரு குழு
கொழும்பு:
இலங்கை கடுநாயகே விமானப்படை தளத்திலும், சர்வதேச விமான நிலையத்திலும்புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க இன்னொரு விசாரணை கமிஷனைஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அமைத்துள்ளார்.
இதில் 8 விமானப்படை விமானங்களும், 6 பயணிகள் விமானங்களும் தகர்ந்தன.
இதையடுத்து இத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிடி.ஜெயவிக்ரமா தலைமையிலான 3 பேர் கொண்டவிசாரணை கமிஷனைஅமைத்துள்ளார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
விமானப்படை அதிகாரி பாடிமான்டிசும் தனி விசாரணை ஒன்றை நடத்தி வருகிறார்.
பாதுகாப்பை பலப்படுத்த தனி குழு:
பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்திலும், மற்ற விமான நிலையங்களிலும்பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை கூற உயர் மட்ட குழு ஒன்றும்அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவுக்கு பாதுகாப்பு செயலாளர் சந்திரானந்தா-டி-சில்வா தலைவராக இருப்பார்என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந் நிலையில் இலங்கை விமானத்துறை பல இடங்களுக்குச் செல்லும் விமானங்களைரத்து செய்துள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் விமானமும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
புலிகள் தாக்குதலால் விமானங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லி,மும்பை நகரங்களுக்கான விமானங்களும், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குசெல்லும் பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான கட்டணத்தையும் இலங்கை அரசு உயர்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
