உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர்கள் போட்டியிட ரஜினி தடை
சென்னை:
தனது ரசிகர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது பெயரைப் பயன்படுத்தி போட்டியிடக் கூடாது என்று நடிகர்ரஜினிகாந்த் ரகசிய தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1996-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக டிவியில் ரஜினி பிரச்சாரம் செய்தார்.இதனால் அந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.
அடுத்த சில மாதங்களிலேயே வந்த லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே தனது ஆதரவைத் தெரிவித்ததார்ரஜினி. ஆனால் இந்த முறை எதிர்பார்த்த வெற்றியை அந்தக் கூட்டணி பெறமுடியவில்லை.
இதனால் அடுத்து வந்த 2 தேர்தல்களிலும் ரஜினி கொஞ்சம் அடக்கி வாசித்தார். அதாவது எந்தக் கட்சிக்கும் தனதுஆதரவு கிடையாது. யாரும் தனது பெயரையோ, படத்தையோ போஸ்ட்டர்களில் கூட பயன்படுத்தக் கூடாது என்றுசொல்லி விட்டார்.
ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சிலர், ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாகப் போட்டியிட்டனர்.மேலும் ரஜினியின் படத்தையும் பயன்படுத்தினார்கள்.
இந்நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சில ரசிகர்கள் முயன்று வருவதாக ரஜினிக்குத்தகவல் கிடைத்தது.
இதனால் ரசிகர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கருதிய ரஜினி, தனது மன்ற செயலாளர்சத்தியநாராயணா மூலம் அனைத்து ரஜினி மன்றங்களுக்கும் ரகசியமாக ஒரு உத்தரவு பறந்துள்ளது. அதில், வரும்உள்ளாட்சித் தேர்தலில் யாரும் மன்றத்தின் சார்பாகப் போட்டியிட வேண்டாம் என்று ரசிகர்கள் அனைவரும்அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications