அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பினார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தான் கைது செய்யப்பட்டபோது போலீசார் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்து விளக்கிஅனைத்து மாநில முதல்வர்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.


தோள்பட்டை வலி காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி நேற்று தான் வீடுதிரும்பினார்.

இன்று அவர் அனுப்பி வைத்த கடிதங்களுடன் மத்திய அமைச்சர்கள் மாறனும் பாலுவும் இணைந்து எழுதியுள்ளநள்ளிரவுக் கைதுகள் என்ற புத்தகத்தையும் கருணநிதி அனுப்பி வைத்துள்ளார்.

கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பதவிக்கு அனுப்பிவைக்குமாறு வாஜ்பாய் அரசு அனுப்பிய உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இப்போது ஜெயலலிதாவைப் பின் தொடர்ந்து கருணாநிதியும் தது தரப்பு வாதத்தை முன் வைத்து அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில், நள்ளிரவுக் கைதுகள் என்ற புத்தகத்தையும்,கைது தொடர்பான புகைப்படங்கள், பத்திரிக்கைகள் எழுதிய கண்டனங்கள் ஆகியவையும் ஆங்கில மற்றும்அந்தந்த மாநில முதல்வர்களுக்கு ஏற்ற மொழி பெயர்ப்புடன் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு முதல்வர்கள் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளேன்.

மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி. ராஜகோபாலனை ஜெயலலிதா அனுப்பாமல்இருப்பது மத்திய அரசையும் மக்களையும் அவமானப்படுத்துவதற்குச் சமம்.

ராமதாஸ் என்னை வந்து பார்த்த பின்னர் தான், பிற கூட்டணிக் கட்சிகளிடம் பேசிய பின்னர் தான் பா.ம.கவைதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்பதை மீண்டும்தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பொய் சொல்வது யார்?

உங்களை சிறையில் சந்தித்த தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பா.ம.கவைமீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்துப் பேசி உங்களிடன் அனுமதியை வாங்கியதாகக் கூறியுள்ளாரே என்றுநிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, என்னிடம் சிறையில் ராமதாஸ் குறித்து பெர்னாண்டஸ் ஏதும் பேசவில்லை. எனதுநலம் குறித்து மட்டுமே விசாரித்தார் என்று பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+