பா.ம.க. எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்குத் தயாரா? - வாழப்பாடி
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்யச்சொல்லிவிட்டு மீண்டும் தனித்துப் போட்டியிட தயாரா? என்று பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி சவால் விட்டுள்ளார்.
வன்னியர் சங்கத்தின் 2 நாள் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.அந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வாழப்பாடிகூறியதாவது:
பத்மாசுரன் தன் தலையில் தனக்குத்தானே கை வைத்துக் கொண்டது போல் ராமதாசும் கட்சிச் தாவல் முலம்தன்னையும் தன் கட்சியையும் அழித்துக் கொண்டுவிட்டார். ராமதாஸ் சித்தம் கலங்கி பேசுகிறார். சுவற்றில் பந்தைஎறிந்தால் அது எறிபவர் பக்கம்தான் திரும்பி வரும். அதே போல் பேசி வருகிறார் ராமதாஸ்.
அ.தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து 20 எம்.எல்.ஏக்களைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்து விலகி தேசிய ஜனநாயககூட்டணியில் சேர்ந்து விட்டதாகவும், தங்களுக்ககு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.
பா.ம.க. இன்னும் முறைப்படி சேரவில்லை என்றும், கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதில் வரைமுறை ஏற்படுத்தப்படும்என்றும் அறிவிக்கப்பட்ட பிறகு ராமதாஸ் ஏமாற்றம் அடைந்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்யச்சொல்லி விட்டுமீண்டும் தனித்து தேர்தலில் போட்டியிட ராமதாஸ் தயாரா? குறைந்தபட்சம் கடந்த 1996 தேர்தலில் வெற்றி பெற்ற 4இடங்களிலாவது போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?
அ.தி.மு.க. தயவினால்தான் இந்த 20 இடங்களும் கிடைத்து. இவரால் ஒன்றும் செய்ய முடியாது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் அமைப்பு போட்டியிடாது. அமைப்பின் பேரில் யாரும் போட்யிடவிடமாட்டோம். ஆனால் தங்கள் சொந்த செல்வாக்கால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் சுயேட்சையாகபோட்டியிட்டு வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவோம்.
சிவாஜி நினைவு அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அழைப்புவிடுத்திருந்தார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால். அந்த கூட்டத்தில் தி.மு.க., பா.ஜ.க. போன்றகட்சிகளும் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன.
இது உண்மையாக இருந்தால் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன். இளங்கோவன் இதற்கு மறுப்புதெரிவித்தால் நான் கலந்து கொள்வேன் என்று கூறினார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications