ராமதாஸ் உள்ளே வந்துவிட்டார் என்கிறார் ஜனா
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்து விட்டது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
பா.ம.கவை தே.ஜ. கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. நினைத்தால்வருவதும் நினைத்தால் வெளியேறுவதுமாக கூட்டணியை ராமதாஸ் கேலிப் பொருளாக்கிவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், டெல்லிக்கு போனார் ராமதாஸ், வாஜ்பாயை சந்தித்தார். நான் இப்போது தே.ஜ. கூட்டணியில்இருக்கிறேன் என்றார்.
இதையடுத்து நடந்த பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜனா. கிருஷ்ணமூர்த்தி, சில கட்சிகள் திடீரெனகூட்டணிக்குள் வருகின்றன. நினைத்தால் வெளியே போகின்றன. இதை அனுமதிக்க முடியாது என பிரதமருக்கேவார்த்தையால் சூடு போட்டார்.
இந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு வந்த பா.ஜ.க. தமிழக பொதுச் செயலாளர் இல.கணேசன், கூட்டணியில் ராமதாஸ்தான் கூறிக் கொண்டிருக்கிறார். அவரிடமே போய் விளக்கம் கேளுங்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம்கூறினார்.
இந்தக் குழப்பம் போதாது என ராமதாஸ் விவகாரத்தி திமுகவை திருமாவளவன் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இதனால், பா.ம.க. கூட்டணிக்குள் சேர்ந்து விட்டதா இல்லையா என்று மக்கள் குழம்பி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கடந்த வாரம் நடந்த தே.ஜ. கூட்டத்தில் பா.ம.க. சார்பாக அக்கட்சி எம்.பியான பொன்னுசாமி கலந்து கொண்டார்.இதிலிருந்தே பா.ம.கவும் தே.ஜ. கூட்டணியில் சேர்ந்து விட்டதாகத் தானே அர்த்தம்?
ஆனால், தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவர் கருணாநிதிதான். அதனால், தமிழகத்தில் பா.ம.கவின் நிலைபற்றி கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அமைச்சகப் பணிக்கு அழைத்த விதத்தில், மத்திய அரசு தன்னுடையகடமையை நிறைவேற்றியுள்ளது என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications