செக்ஸ் சைட்டாகியது ஆந்திர முதல்வரின் வெப்சைட்
ஐதராபாத்:
இந்தியாவின் "ஹைடெக் முதல்வர்" என்று வர்ணிக்கப்படும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவின்வெப்சைட்டை செக்ஸ் தகவல்களைத் தரும் ஆபாச வெப்சைட்டாக ஆர்மேனியா நாட்டினர் திருட்டுத்தனமாகமாற்றிவிட்டார்கள்.
அவர்கள், மற்றவர்களின் வெப்சைட்களில் நுழைவதற்கான பாஸ்வேர்ட் (ரகசியக்குறியீடு)-ஐத் தெரிந்து கொண்டு,அதில் திருட்டுத் தனமாக நுழைந்து கிறுக்குத்தனமாக ஏதாவது அதில் பதிவு செய்துவிடுவார்கள்.
ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கம்யூட்டர் தொழில் நுட்பத்தில் மிக்க ஆர்வமுடையவர் என்பது எல்லோருக்கும்தெரிந்த விஷயம். தமது மாநிலம் கம்யூட்டர் துறையில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில் பலசீர்திருத்தங்களைச் செய்துவருபவர். மைக்ரோசாப்ட் ஜாம்பவான் பில் கேட்ஸின் இந்திய விஜயத்தின்போது,அவரை ஹைதராபாத்துக்கு அழைத்து ஆந்திராவுக்குப் பெருமை சேர்த்தவர்.
இவர் தனக்கென ஒரு வெப்சைட்டை ஏற்படுத்தி வைத்திருந்தார். அதன் முகவரி www.nchandrababunaidu.comஇந்த சைட்டில் சந்திரபாபு நாயுடு பற்றிய தகவல்கள், அவரது அன்றாடப் பணிகள், அவரது சாதனைகள் ஆகியவைஇடம்பெற்றிருந்தன.
சைபர் கிரிமினல்கள் இந்த சைட்டில் எப்படியோ திருட்டுத்தனமாக நுழைந்து விட்டனர். பிறகு, தங்களுக்குப் பிடித்தஆபாசப் படங்கள் மற்றும் தகவல்களை அதில் இடம்பெற வைத்துவிட்டனர்.
இதையறிந்த நாயுடு அதிர்ந்து போய்விட்டார். பிறகு இந்த சைட்டை நிர்வாகம் செய்யும் அமைப்பிடம் இதுகுறித்துபுகார் செய்தார்.
அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில், ஆர்மேனியா நாட்டில் உள்ள யெரிவன் என்ற இடத்தில் இந்த நாசவேலைகள்நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பிறகு, இந்த சைட்டைப் பார்க்க முடியாதபடி தடை செய்யப்பட்டது.
ஆனால், அந்தத் திருடர்கள் சில நாட்களில், இந்தத் தடையையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விட்டனர்.அதோடு நில்லாமல், இந்த சைட் விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் வேறு கொடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications