கிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதி- பா.ம.க.
சென்னை:
கிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுசெயலாளரும், எம்.எல்.ஏவுமான முருகவேல்ராஜன் கூறியுள்ளார்.
இவர்களில் தினம் ஒருவர் மற்றவரைத் தாக்கிப்பேசி வருவது வழக்கமாகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் பா.ம.க. அதிமுக கூட்டணியை விட்டு வெளியில் வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில்சேர்ந்தததுதான்.
இதுவரை தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பா.ம.க. இல்லாத அணி எது என்று பார்த்து தலித் கட்சிகள் சேரும்.ஆனால் பா.ம.க.வினர் அதுபற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,சேரவேண்டும் என்று நினைத்தால் சேர்ந்து விடுவார்கள். இதுதான் இதுவரை நடந்து வந்த அரசியல் நிகழ்வுகள்.
இந் நிலையில் விடுதலைச்சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இருக்கும் தே.ஜ கூட்டணிக்கு பா.ம.க வந்து சேர்ந்துவிட்டது.
விடுதலைச் சிறுத்ததைைகளின் கொள்கைப்படி பா.ம.க இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. அதனால் 2அணியினருக்கும் இடையே தினமும் வசை மழைதான்.
இதைத்தொடர்ந்து, பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எங்கள் தலைவர் ராமதாஸைப் பார்த்து சந்தர்ப்பவாத அரசியல்செய்வதாகக் கூறுகிறார். ஆனால், கிருஷ்ணசாமிதான் சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந்துவந்திருக்கிறார்.
அவர் படிக்கும்போது தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்றும் லெனினிஸ்ட் என்றும் சொல்லிக் கொண்டு கம்யூனிஸ்ட்வாதியாகக் காட்டிக்கொண்டார்.
பிறகு அதிலிருந்து மாறுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு அதுசரியில்லை என்று சொல்லிவிட்டு, திமுகவிடம் அடைக்கலம் புகுந்தார்.
திமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுப் பார்த்தார். வெற்றிபெறமுடியவில்லை. பிறகு அங்கிருந்துகழன்றுகொண்டு தேவேந்திர குல வெள்ளாலர் அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டார். பிறகுபுதிய தமிழகம் என்று கட்சியை ஆரம்பித்துள்ளார்.
இப்படி தன் வாழ்நாளில் தாவுவது ஒன்றையே கொள்கையாக வைத்திருப்பதால் தனது அடையாளத்தைஇழந்துகொண்டிருப்பவர் கிருஷ்ணசாமி.
உண்மையில் இவர்தான் சந்தர்ப்பவாதி. அதன் முழுமொத்த உருவமும் இவர்தான். இவரெல்லாம் சந்தர்ப்பவாதம்பற்றிப் பேசக்கூடாது.
இவ்வாறு முருகவேல்ராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications