பேரணியில் மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ. மரணம்
சென்னை:
திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியின்போது காயமடைந்து மயக்கமடைந்த சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏவானவை.பெருமாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை இறந்தார்.
பெருமாள் சென்ற ஜீப் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் வை. பெருமாள் உள்ளிட்ட ஜீப்பில் இருந்த பலரும்காயமடைந்தனர். கலாட்டாவால் அதிர்ச்சியடைந்த அவருக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து கூட்டத்தைக்கட்டுப்படுத்த அவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அமைதியாக இருக்குமாறு திமுகவினரை அவர் நெடு நேரம் மைக் மூலம்கேட்டுக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பேசியதால் அவருக்கு மயககம் ஏற்பட்டது. அங்கேயே பெருமாள் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலைபெருமாள் இறந்தார்.
திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் வை.பெருமாள். சைதாப்பேட்டைதொகுதியில் வழக்கமாக திமுக சார்பில் போட்டியிடும் கா.கிட்டுவுக்கு உடல் நலமில்லாமல் போனதால் அவருக்குப் பதில் கடந்ததேர்தலில் வை.பெருமாள் போட்டியிட்டார்.
பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்ட பழுத்த தொழிற்சங்கவாதியான பெருமாள் மிகுந்த அமைதியான குணம் படைத்தவர்.தீவிர திமுககாரர். நீண்டகாலமாக அரசியலில் பெரிய பொறுப்புகள் வகிக்காத அவருக்கு கடந்த தேர்தலில் தான் எம்.எல்.ஏ. சீட்கிடைத்தது.
முழு மூச்சுடன் திமுகவுக்காக உழைத்து வந்த பெருமாள் மரணமடைந்துள்ளது திமுக தலைவர் கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
வை.பெருமாளின் உடலுக்கு திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகனும், சென்னை மேயர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர்அஞ்சலி செலுத்தினர்.
போலீஸ் மறுப்பு:
பேரணியில் கலந்து கொண்டிருந்த போது, பெருமாளுக்குக்கு மயக்கம் ஏற்பட்டு, திங்கள்கிழமை காலைமருத்துவமனையில் இறந்தார் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், போலீசார் இதை வன்மையாகமறுக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே நெஞ்சு வலி காரணமாக, பெருமாள் அப்போலோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார். அவர் திமுக பேரணியில் கலந்து கொள்ளவே இல்லை என்று போலீசார் கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications