மீண்டும் மீண்டும் சிக்கலில் ஜெயலலிதா
சென்னை:
திமுக மீது மீண்டும் நேரடித் தாக்குதல் தொடுத்தன் மூலம் மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கிறார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
ஆனால், ராஜ்யசபாவில் போதிய மெஜாரிட்டி இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஆட்சிக் கலைப்புதீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை இருந்ததால் தப்பினார். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும்ஜெயலலிதாவை ஆதரித்தால் தப்பினார்.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்களான மாறன், பாலுவைத் தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்குமாறு மத்திய அரசு கூறியும் அதை செயல்படுத்த ஜெயலலிதா தவறினார்.
பின்னர் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியஉத்தரவையும் மதிக்கத் தவறினார் ஜெயலலிதா.
இதனால், மத்திய அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. சமீபத்தில் டெல்லி செல்ல இருந்தஜெயலலிதா, பிரதமரைச் சந்திக்க அவரது அப்பாய்ண்மென்ட் கிடைக்காதால் தனது பயணத்தையே ரத்து செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இப்போது மீண்டும் திமுக மீது நேரடியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இதனால், தமிழக அரசு மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பை ஜெயலலிதாவே உருவாக்கித் தந்திருக்கிறார்.
அதே நேரத்தில் ஜெயலலிதா ஆட்சியைக் கலைப்பதைவிட அவரது முதல்வர் பதவிக் காலம் முடிந்தவுடன்அதிமுகவை உடைக்கவே மத்திய அரசும் திமுகவும் பெரிதும் விரும்புகின்றன. இதனால் தான் ஆட்சிக் கலைப்பைகருணாநிதியும் வலியுறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிக்க வேண்டுமானால், இன்னும் 3 மாதங்களில் எப்படியாவது எம்.எல்.ஏ.ஆகியே தீர வேண்டும். ஆனால், இதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.
இதனால், இன்னும் 3 மாதத்துக்கு மேல் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என மத்திய அரசுநினைக்கிறது. அதுவரை ஜெயலலிதா அரசைக் கலைக்கவும் விரும்பவில்லை.
ஜெயலலிதாவுக்குப் பதில் வேறு ஒருவர் முதல்வராக வரும் பட்சத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தி அதைதங்களுக்கு ஆதரவாக திருப்பவே மத்திய அரசு விரும்புகிறது.
இது ஜெயலலிதாவுக்கும் தெரியும் என்பதால் தான் மிக அதிரடியாக மத்திய அரசுக்கும் கருணாநிதிக்கும் எதிராககாய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ, ஜெயலலிதாவுக்கு இப்போது தான் உண்மையான சிக்கல் ஆரம்பித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications