18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2001-02ம் ஆண்டுக்கான இடைக்கால தமிழக பட்ஜெட் வரும் 16ம் தேதி (நாளை)க்குப் பதிலாக 18ம் தேதி தாக்கல்செய்யப்படுகிறது.

கடந்த மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஆளும் அதிமுக அரசு முதல் முறையாக தமிழகபட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) துவங்குகிறது. நாளையே பட்ஜெட்டும் தாக்கல்செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், அது வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சென்னை-சைதாப்பேட்டை எம்.எல்.ஏவான வை.பெருமாள் கடந்த திங்கள்கிழமை இறந்து போனார். அதனால், அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நாளையகூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும்.

பின்னர், தமிழக நிதி அமைச்சர் சி. பொன்னையன் வரும் 18ம் தேதி தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+