மூப்பனாரின் உடல் நலம் விசாரித்தார் கருணாநிதி
சென்னை:
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று தமாகாதலைவர் மூப்பனாரின் உடல் நலத்தை இன்று (புதன்கிழமை) விசாரித்தார்.
இந்நிலையில், இன்று காலை மூப்பனாரைச் சந்திப்பதற்காக, மருத்துவமனைக்கு வந்திருந்தார் கருணாநிதி. ஆனால்,மூப்பனாருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், அவரால் மூப்பனாரைச் சந்திக்கமுடியவில்லை.
இதனால், மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனைச் சந்தித்து, மூப்பனாரின் உடல் நலத்தைப் பற்றி கருணாநிதிவிசாரித்தார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு வெளியே வந்து, நிருபர்களிடம் பேசுகையில், "மூப்பனாரின் உடல்நிலை தேறிவருகிறது. அவர் விரைவில் குணமடைய விழைகிறேன்" என்று கூறினார்.
கருணாநிதியுடன், அவருடைய மகனும் சென்னை மாநகர மேயருமான ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடிஆகியோரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications