இலங்கை கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
கண்டி:
இலங்கை-கண்டி நகரில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. ஆனாலும், இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து,"சந்தோஷ"மடைந்தது.
முதல் டெஸ்ட் கடந்த 14ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பீல்டிங் செய்யத்தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள்எடுத்தது. அடுத்து பேட் செய்ய வந்த இலங்கை அணி, மிகச்சிறப்பாக ஆடி 362 ரன்கள் எடுத்து தனது அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்சிலும் இந்திய வீரர்கள் மிகச் சொற்ப ரன்களுடன் ஒருவர் பின் ஒருவராகஆட்டமிழந்தார்கள். இதனால் அணியின் ஸ்கோர் 180 ஆக இருந்த போது 9 வீரர்களும் ஆட்டமிழந்து இருந்தனர்.டிராவிட் அவுட் ஆகாமல் இருந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு டிராவிட்டும் வெங்கடேஷ் பிரசாத்தும் இணைந்து 52 ரன்கள் எடுத்தது குறிப்பிடத் தக்கது.இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, இந்தியாவின் மொத்த ஸ்கோர் 5 ரன்கள் அதிகமிருந்ததால்இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது இந்திய அணி.
இந்நிலையில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ஜெயசூர்யா, ஜாஹீர்கான் பந்தில் ஒரு பவுன்டரி அடித்தார்.பிறகு இரண்டு உதிரி ரன்கள் எடுத்து மேட்சை முடித்து வைத்தார்.
இதையடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைஅணி 1-0 என்ற நிலையில் முன்னனியில் இருக்கிறது.
அடுத்த டெஸ்ட் கண்டியில் வருகிற 22 -ம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications