இயேசுவோடு கருணாநிதியை ஒப்பிடுவதா? கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இயேசு நாதர் சிலுவை சுமக்கும் படத்தோடு, திமுக தலைவர் கருணாநிதியின் கைது படத்தை ஒப்பிட்டுகட் அவுட் வைத்ததற்கு கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அப்போது ஒரு இடத்தில் இயேசுநாதர் சிலுவை சுமப்பதாக உள்ள கட் அவுட்டோடு, கருணாநிதியை காவல்துறைஅதிகாரி இழுத்துச் செல்வது போன்ற கட் அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. இது கிறிஸ்தவர்களிடையே கடும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முறை ஜெயலலிதா முதல்வராகஇருந்தபோது அவரை மேரி மாதா உருவத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் கண்டித்துக் குரல் கொடுத்தோம்.அப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட நாங்கள் கண்டித்தோம்.
இப்போது திமுகவினர் இயேசுநாதரோடு, கருணாநிதியை ஒப்பிட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்று அதில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications