ரூ. 10.7 கோடி செலவில் இன்னொரு தலைமைச் செயலகம்
சென்னை:
சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் நிர்வாகத் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி அதிகமாகிவிட்டதால் ரூ. 10.7 கோடியில் கூடுதல் தலைமைச் செயலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசின் பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பிற விவரங்கள்,
சாக்லேட், செல்போன்களுக்கு 8 சதவீத விற்பனை வரி விதிக்கப்படும். ரூ. 50 வரையிலான விலை கொண்ட செருப்புகளுக்குதற்போது வரி விலக்கு அமலில் உள்ளது. அது ரூ. 100 வரையிலான செருப்புகளுக்கும் விரிவாக்கப்படுகிறது.
காகித கப்புகளுக்கு விற்பனை வரி குறைக்கப்படுகிறது. ஸ்டெபிலைசர் உதிரி பாகங்களுக்கு 4 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
20 கோடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். தமிழகம்முழுவதிலுமுள்ள எம்.ஜி.ஆர். சத்துணவுக் கூடங்களைப் புதுப்பிக்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மன நலம் குன்றிய குழந்தைகள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். வக்ப்வாரியத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்டுவதற்காக ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications