திமுகவின் ஏசு கட்-அவுட்டை எதிர்த்துப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இயேசு நாதரோடு திமுக தலைவர் கருணாநிதியை ஒப்பிட்டு கட்-அவுட் வைக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அதிமுகமற்றும் கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் இந்த கட் அவுட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மற்றும் கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்ஆகியவை அறிவித்திருந்தன. இதன்படி சென்னையில் திங்கள்கிழமை இவை இரண்டும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகம் எதிரில் இந்தப் போராட்டம் இன்று காலை நடந்தது. இதில் அதிமுக சிறுபான்மைப்பிரிவினர் மற்றும் கிறிஸ்தவ முன்னேற்றக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications