சென்னையில் 10 மணி நேரத்தில் தயாரான ரயில்வே சுரங்கப் பாதை
சென்னை:
சென்னை-திருவொற்றியூரில், ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, 10 மணி நேரத்தில் ரயில்வே சுரங்கப்பாதைஅமைக்கப்பட்டு, அது மக்கள் போக்குவரத்துக்கும் திறக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இப்பாதையில் ரயில் போக்குவரத்து அதிகம் இருப்பதால் சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனஇப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, கடந்த தி.மு.க ஆட்சியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தி.மு.க. எம்.பியானகுப்புசாமி தனது எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தார். ரயில்வே ரூ.15 லட்சத்தைஒதுக்கியது.
இதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து விட்டு காலையில் பணிகளைஆரம்பித்து மாலையில் முடித்து விட முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குப் பணிகள் ஆரம்பித்தன. 500 ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். 5புல்டோசர்கள், 4 கிரேன்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மாலை 5 மணிக்குள் திட்டமிட்டபடி சுரங்கப்பாதைஅமைக்கும் பணிகள் முடிந்தன.
இந்திய ரயில்வே வரலாற்றில், 10 மணி நேரத்திலேயே முடிக்கப்பட்ட முதல் சுரங்கப்பாதை இதுதான் என்றசாதனையை இந்தச் சுரங்கப்பாதை பெற்றுள்ளது.
பணிகளை எம்.பி. குப்புசாமி, தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜி,ரயில்வே அதிகாரிகள் நேரில் பார்த்தனர். பொதுமக்களும் ஏராளமான அளவில் கூடியிருந்து வேடிக்கைபார்த்தனர்.
பணிகள் முடிந்த கையோடு, இந்தச் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகத் திறந்து வைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications