"புலம்பல்"தான் பிரச்சனைக்கு வித்திட்டது: கருணாநிதி
சென்னை:
சட்டசபையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து அன்பழகன் வெளியேறியது குறித்து முன்னாள் முதல்வர்கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சட்டசபையில் உறுப்பினர் பரிதி இளம்வழுதி 2 நாள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு தங்கள்எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
அவையில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி நான் வெளியே அதிகமாக பேசக்கூடாது. அது மரபும், முறையும் அல்லஎன்பதை நான் நன்கு அறிந்தவன். அதற்குப் பிறகு பரிதி கூறியதை எதிர்த்து முதல்வர் குறுக்கிட்டு சிலவார்த்தைகளை சொல்லி இருக்கிறார்.
பின்னர், பட்ஜெட் பற்றித் தான் பரிதி பேசியிருக்கிறார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு "உங்கள் புலம்பலைநிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதற்கு பரிதி, ஏன் "புலம்பல்" என்று சொல்கிறீர்கள் எனக்கேட்டிருக்கலாம். ஆனால் அவர் சபாநாயகர் எப்போதோ பேசிய வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.
முன்னதாக சபாநாயகர் "புலம்பல்" என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை. இதனால் பிரச்சனைஉருவாகக் காரணமாகிவிட்டது. அப்போது அன்பழகன் அங்கேயே அதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்.
அதாவது கமிஷன் போடப்பட்ட பிறகு பேரவையில் அதைப்பற்றிப் பேசக்கூடாதே தவிர, மொத்தமாக பேரவையில்எப்படி அதை மறைத்துவிட முடியும் என்று கேட்டார்.
பிறகு உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவெடிப்பதற்காக வெளியில் வந்துவிட்டார். பிறகு அனைத்து திமுகஉறுப்பினர்களும் வந்துவிட்டார்கள். வெளியில் வந்து கலந்து பேசினார்கள். நாளை தொடர்ந்து சபைக்குச்செல்வார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
ஆனால் அன்பழகன் அமைதியாக இருக்கும்படி கூறியும் அதைக் கேட்காமல் சில திமுக உறுப்பினர்கள் தொடர்ந்துகூச்சல் போட்டதால்தான் அன்பழகன் கோபமாக வெளியில் வந்து விட்டார் என்று கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications