• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலத்தை தடை செய்ய கோரிக்கை

By Staff
|

சென்னை:

தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை நகரில் இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்புகள் நடத்தத்திட்டமிட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம். வீணான மதக் கலவரத்திற்கு காரணமாகஇந்த ஊர்லவங்கள் அந்ைதிருக்கும். அதைத் தடுத்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்து முன்னணி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அதை எதிர்த்து நாங்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவோம் எனஅறிவித்திருந்தோம். அதற்குள் இந்து முன்னணி ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று நாங்கள்கருதுகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X