யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானங்கள் குண்டுவீச்சு
கொழும்பு:
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று அதிகாலை விடுதலைப்புலிகள் காவல் நிலையத்தைத் தாக்கி 15போலீசாரைக் கொன்றதையடுத்து இலங்கை இராணுவமும் பதிலுக்கு புலிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது.
புலிகள் தாக்குதலையடுத்து போலீசாரும் திருப்பிச் சுட்டனர். இதில் 3 புலிகள் கொல்லப்பட்டனர். 7 பேர்காயமடைந்தனர்.
இதையடுத்து புலிகள் அருகாமையில் உள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமின் மீதும் தாக்குதல் நடத்தினர்.இந்தப் படை யாழ்பாணப் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் முகாம்கள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதிகளில்இலங்கை இராணுவம் விமானத் தாக்குதல் மூலம் புலிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இது குறித்து அந்நாட்டுஇராணுவச் செய்தித் தொடர்பாளர் கருணாரத்னே கூறியதாவது,
புலிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இராணுவம் விமானத்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலில் தயாரான "க்பிர்" ரக ஜெட் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்திவருகின்றன.
இதுவரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவலர்களைப் பற்றிய செய்தி வரவில்லை. அதேபோல புலிகள் தரப்பில்இருந்தும் எதிர் தாக்குதல் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
புலிகள் போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி பிறகு 4 மணி நேரம் கழித்து இந்தத் தாக்குதலை இலங்கைஇராணுவம் ஆரம்பித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications