இலங்கை அரசு- எதிர்கட்சிகள் பேச்சு தொடங்கியது
கொழும்பு:
இலங்கையில் சந்திரிகா அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களுடன் எதிர்கட்சித் தலைவர்கள்பேச்சுவார்த்தையை சனிக்கிழமை தொடங்கினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சந்திரிகா அரசில் அமைச்சர்களாக இருக்கும் ஜெயரத்னே, மஹிந்தா ராஜாபக்ஷே,லக்ஷ்மண் கதிர்காமர், அனுருத்த ரத்வதே, மங்கல சமரவீர மற்றும் நிமல் ஸ்ரீபால டி சில்வ ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
முக்கிய எதிர்கட்சியான யு.என்.பி. தரப்பில் இருந்து அதன் துணைத் தலைவர் கரு ஜெயசூர்யா, சரிதா ரத்வதே,டைரோன் பெர்ணாண்டோ மற்றும் சோஷ்கி ஆகிய 4 பேர் பேசி வருகின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று முதல் 28ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 115 எம்.பிக்கள் ஆதரவைப் பெற்றுள்ள எதிர்கட்சிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரசு கொண்டுவந்த பாராளுமன்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தையும், எதிர்க் கட்சிகளின் நம்பிக்கை இல்லாதீர்மானம் மீது வரும் அக்டோபர் 18 ம் தேதி நாடு முழுவதும நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வாக்கெடுப்பை ரத்துசெய்யவும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
ஆனால் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே எதிர்கட்சிகளின் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், தேர்தல்கள் நடத்துவது, நீதித்துறை விவகாரங்கள், பத்திரிக்கைத்துறை, பொதுமக்கள்சேவை, காவல் துறை விவகாரங்கள் ஆகியவற்றைக் கவனிக்க தனிக் குழுக்கள் அமைக்கவும் எதிர்கட்சிகள்அரசுக்கு பரிந்துரை செய்யும் எனவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications