தேறி வருகிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரதுகுடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மூப்பனாரால் பிறரை எளிதாக அடையாளம் காண முடிவதாகவும், ஓரளவு பேச முடிவதாகவும் அவரதுகுடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் முழு குணம் அடைவார் என்றும் அவர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பல்வேறு அரசியல் தலைவர்கள் மூப்பனாரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை மூப்பனாரைப் பார்த்தார்.












Click it and Unblock the Notifications