• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்... சத்திஸ்கர் முதல்வரும் ஜெ.க்கு ஆதரவு

By Staff
|

சென்னை:

ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்ற தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் நிலைக்கு சத்திஸ்கர் மாநில முதல்வர் அஜித் ஜோகியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் துணை கமிஷனர்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்தியப் பணியில் சேருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இதற்காக, அந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் உடனே விடுவிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றுவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். மத்திய அரசு இதில்தலையிடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், அந்த 3 அதிகாரிகளையும் அனுப்ப முடியாது என்று மத்தியஅரசுக்குக் கடிதமும் எழுதிவிட்டது தமிழக அரசு.

மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய அதே சூட்டோடு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா. அதில், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் விஷயத்தில், தன்னுடைய நிலையை ஆதரித்துபிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஒரு சில நாட்களிலேயே இந்தக் கடிதத்துக்கு முதல் ஆதரவு கிடைத்தது. ஜெயலலிதாவின் ஆதரவைத் தெரிவித்தராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட், மத்திய அரசின் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து, பிரதமருக்குக்கடிதம் எழுதினார்.

கடந்த வாரம் மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து,பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும் தன்னுடைய ஆதரவைத் தமிழகத்திற்குத்தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சத்திஸ்கர் மாநில முதல்வர் அஜித் ஜோகி திங்கள்கிழமை பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் செய்யும் விஷயத்தில், தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் நடந்துகொண்ட மத்திய அரசின் போக்கை அந்தக் கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார் ஜோகி.

ஜெயலலிதாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்களில், ராஜஸ்தான் முதல்வர், பாண்டிச்சேரி முதல்வர் மற்றும்சத்திஸ்கர் முதல்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளமுதல்வரோ பாஜகவின் முக்கிய எதிரியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X