ஜனாதிபதி நாராயணனுக்கு உடல் நலக்குறைவு
டெல்லி:
திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கலந்து கொள்வதாக இருந்தஅர்ஜுனா விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிளும் அடுத்த 15 நாட்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜுலை மாதம் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சல் அதிகமானதால் அவர் டெல்லியில்உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
காய்ச்சல் குணம் அடைந்த பின் நாராயணன் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.ஆனால் நாராயணனன் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நாராயணனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 29ம் தேதி அவர்பங்கேற்பதாக இருந்த அர்ஜுனா விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் அடுத்த 15நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நாராயணன்தவிர்த்து வந்தார். கிரீஸ் நாட்டுக்கும், அயர்லாந்து நாட்டுக்கும் தான் செல்ல இருந்த பயணத்தையும் அவர் ரத்துசெய்துவிட்டார்.
சில தினங்களுக்கு முன் டெல்லி வந்த பாலஸ்தீன இயக்க தலைவர் யாசர் அராபத்தை சந்திப்பதாக இருந்தார்நாராயணன். உடல் நலக்குறைவு காரணமாக அந்த சந்திப்பும் நடைபெறவில்லை.
கே.ஆர். நாராயணனுக்கு உடலில் எந்த பாதிப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூற மறுத்துவிட்டனர். அவரைதாக்கி இருந்த வைரஸ் நோய் தாக்குதல் இன்னமும் பூரணமாக குணமாகவில்லை என்று மட்டுமே மருத்துவர்கள்கூறினர்.
கே.ஆர். நாராயணனின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் சதீஷ் நம்பூதிரிபாடுகூறுகையில்,
ஜனாதிபதிக்கு சாதாரண காய்ச்சலும், சோர்வும் உள்ளது. வைரஸ் காய்ச்சலுக்கு பிறகு ஓய்வின்றி தொடர்ந்துபணியில் ஈடுபட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 நாட்கள் வரை அவர் ஓய்வு எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் உடல்நிலயிைல் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றார்.
வரும் அக்டோபர் மாதம் கே.ஆர். நாராயணனுக்கு 80 வயது பூர்த்தியாகி 81ம் வயது பிறக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications