17 மாதங்களில் 8 முறை வெளிநாடு சென்ற முரசொலி மாறன்
டெல்லி:
கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான 17 மாதங்களில்மத்திய அமைச்சர் மாறன் 8 முறை வெளிநாடு பயணம் சென்றுள்ளார்.
அப்போது ஒரு உறுப்பினர் எழுந்து சென்ற முறை ராமகிருஷ்ண ஹெக்டே வர்த்தக அமைச்சராக இருந்தபோது 2ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் மாறன் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறாரே இதனால் நாட்டுக்கு ஏதாவது பயன்ஏற்பட்டுள்ளதா என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய இணை அமைச்சர் திக்விஜய் சிங் கூறுகையில்,
மாறன் கடந்த 2 ஆண்டுகளில் அடிக்கடி வெளிநாடு பயணம் செய்தார். இவர் கடந்த 17 மாதங்களில் 8 முறைவெளிநாடு பயணம் செய்துள்ளார். அவர் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா (2 முறை), பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கியஅரபு நாடுகள், எகிப்து, சீனா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
இந்தப் பயணங்கள் மூலம் வெளிநாடுகள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளின் நேரடி முதலீட்டைப் பெருக்க வேண்டும் என்றநோக்குடன் தான் இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இரட்டை வரி முறையை விலக்கியதிலிருந்து மொரீசியசுக்கும், நம் நாட்டிற்கும் வாணிபம் பெருகியுள்ளது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.


Click it and Unblock the Notifications
