உறவில் பாதிப்பில்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சன்னை:
பத்திரிக்கை நிருபர்களுக்கும் திமுகவுக்கும் எப்படி உறவு பலமாக இருக்கிறதோ, அதைப்போல திமுக-பாஜக உறவுநீடிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக-பாஜக உறவில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. 2 கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உறவுதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும்.
பத்திரிக்கை நிருபர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்ந்து எப்படி நல்ல உறவு இருக்கிறதோ, அதுபோலத்தான்திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு நீடித்துக் கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.
திமுகவையும் பாஜகவையும் பிரித்து விடுவதற்காகத்தான் ஜெயலலிதா இவ்வாறு பேசுகிறாரா என்ற நிருபர்களின்கேள்விக்குப் பதிலளிக்க கருணாநிதி மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications