சட்டசபையை கருணாநிதி புறக்கணிப்பது ஏன்? திமுக-அதிமுக மோதல்
சென்னை:
சட்டசபைக்கு வராமல் கருணாநிதி ஏன் ஓடி ஒளிகிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஏதோ மனித உரிமை மீறல்... மனித உரிமை மீறல் என்று திமுகவினர் கூச்சல் போட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் மனிதஉரிமை மீறலே நடக்கவில்லையா. திருநெல்வேலியில் தலித் மக்களை தடியடி நடத்தி தாமிரபரணி ஆற்றில் போலீஸ் தள்ளியதே,அதில் 17 அப்பாவிகள் உயிரிழந்தார்களே, அது மனித உரிமை மீறல் இல்லையா?
சட்டசபைக்கு வராமல் தனது ஜனநாயகக் கடமையைப் புறக்கணிக்கிறார் கருணாநிதி. பேசாமல் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டு அந்தத் தொகுதியில் வேறு யாரையாவது கருணாநிதி போட்டியிடச் செய்யலாம் என்றார்.
அப்போது இடைமறித்த திமுக உறுப்பினரும்முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில்,
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட தமிழ் மாநில காங்கிர்ஸ உறுப்பினர் ஹக்கீமுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எந்தச்சூழ்நிலையில் கருணாநிதி சட்டசபைக்கு வராமல் புறக்கணிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஜூன் 30ம் தேதிகருணாநிதியை போலீஸ் படுத்தியபாடு குறித்து யாரும் மறந்துவிட முடியாது. கைதாகி அவர் பட்ட சிரமங்கள் எவ்வளவுதெரியுமா. அவையைப் புறக்கணிக்க அவருக்கு முழு உரிமை உண்டு.
அப்போது பேசிய அமைச்சர் பொன்னையன், 1989ம் ஆண்டில் ஜெயலலிதா சட்டசபையில் தாக்கப்பட்டார். அதனால் தான் அவர்அவையைப் புறக்கணித்தார். ஆனால், அப்படி ஏதும் வன்முறை கருணாநிதிக்கு எதிராக நடந்துவிடவில்லையே என்றார்.
இதையடுத்து திமுகவினர் ஏதோ பதில் சொல்ல, அதிமுகவினர் பதிலுக்குக் கேள்வி கேட்க அவையில் பெரும் அமளி நிலவியது.யார் என்ன சொல்கிறார்கள் என்றே புரியாத அளவுக்கு கூச்சல் குழப்பம் நிலவியது.
அந் நிலையில் முன்னாள் அமைச்சரும் திமுக உறுப்பினருமான கோ.சி. மணி பேசினார். மிக விரைவிலேயே உரிய நேரத்தில்கருணாநிதி சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றார். இதையடுத்து இந்தப் பிரச்சனை முடிந்தது. அவையில் அமைதிதிரும்பியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications