ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி
சென்னை:
மறைந்த தலைவர் மூப்பனாரின் உடல் மயிலாப்பூரில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டசபைஎதிர்க்கட்சி தலைவரமான அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சரும் தமாகாஜனநாயக பேரவை தலைவருமான ப.சிதம்பரம்,
த.மா.கா. தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன்,சோ.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் மூப்பனாரின்உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தென்னிந்திய திரைப்பட சங்க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உள்ளிட்ட பலநடிகர் நடிகைகளும் மூப்பனாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.விஜய்காந்த் மூப்பானாரின் உடலைக் கண்டவுடன் கதறிவிட்டார்.
கலங்கிய விழிகளுடன் மக்கள்
கலங்கிய கண்களுடன் பெருந்திரளான பொதுமக்கள் அமைதியான முறையில்மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மூப்பனாருக்கு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா காந்தி சென்னை வருகிறார்.
சோனியா வருகை
முன்னதாக மூப்பனாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க சோனியா காந்தி இன்று(வியாழக்கிழமை) காலை சென்னை வருவதாக இருந்தார். ஆனால், இதற்குள்மூப்பனார் காலமாகிவிட்டார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளசோனியா சென்னை வருகிறார்.
மூப்பனாரின் பிறந்து ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம். அவர் செல்வச்செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு
அவர் ஏழை,பணக்காரன் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் இனிமையாகபழகியவர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கும்பகோணம், பாபாநாசம்,சுவாமிமலை உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரைஅரங்குகளில்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் அரங்கிற்கு...
மூப்பனாரின் உடல் வியாழக்கிழமை மாலை காமராஜர் அரங்கிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை இறுதிசடங்கு நடைபெறுகிறது. தனது இறுதி மூச்சுவரை மூப்பனார் சொல்ல மறக்காத ஒரேபெயர் காமராஜர் தான்.
காமராஜரின் நெருக்கமான அன்பைப் பெற்றவர் மூப்பனார். காமராஜரை தனதுதெய்வமாகவே மதித்தவர் மூப்பனார்.
மூப்பனாரின் உடலை காமராஜர் அரங்கில் வைப்பது தான் முறையும் கூட.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications