ஜெ.அப்பீலுக்கு தடை: கருணாநிதி "நோ கமெண்ட்ஸ்"
சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம்தடை விதித்துள்ளது, ஜெயலலிதாவுக்கு தோல்வியா என்பது குறித்து கருத்து கூற திமுக தலைவர் கருணாநிதிகருத்துகூற மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3ஆண்டு சிறை தண்டனை விதித்து தனி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஜெயலலிதா கடந்தசட்டசபை தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது.
தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும என்று கோரி ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த அப்பீல் மனு மீதான விசாரணை கடந்த 27ம் தேதி முதல் சென்னை உயர் நீதமன்றத்தில் நீதிபதிபாலசுப்ரமணியன் முன்னிலையில் நடந்து வந்தது.
இந்நிலையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் வேங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்அடிப்படையில் ஜெயலிதா மீதுள்ள டான்சி நிலபேர ஊழல் வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தொடர்ந்துவிசாரிக்க உயச்உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளிதத்து.
இது குறித்து செய்தியாளர்கள் வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து கேட்டனர். இது குறித்துகருணாநிதி கூறியதாவது:
ஜெயலலிதா மீதான டான்சி நில பேர ஊழல் வழக்கு அப்பீல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றி நானும் கேள்விப்பட்டேன்.
இது நீதிமன்ற விவகாரம் அதில் கருத்து கூறுவது முறையல்ல. கருத்து கூறவும் கூடாது என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு பின்னடைவா என்று நிருபர்கள் கேட்ட போது கருணாநிதி "நோகமெண்ட்ஸ்" என்று கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications